அவள் தினமும் இரண்டு வேளை அங்கு சென்று கடையை சுத்தம் செய்து வந்தாள்.
அன்றும் அப்படித்தான் அந்த கடையை சுத்தம் செய்து கொண்டிருந்தாள். அங்கே இரப்பர் பாண்டுடன் கத்திரிக்கப்பட்ட முடிக்கற்றை குதிரைவால் போல இருந்தது.
அப்போது காலையில் அவள் கண்ட காட்சி நினைவு கூர்ந்தாள். ஒரு அம்மாவும் மகளும் பியூடீ பார்லருக்கு வந்து அவள் மகளுக்கு பையனை போல பாய் கட் செய்ய சொல்லி பாவி அவள் அந்த பெண்ணுக்கு கிட்டத்தட்ட மொட்டையே அடித்துவிட்டாள்! அதை எண்ணிக்கொண்டே அந்த முடின்கற்றையை எடுத்துக்கொண்டு அதை தடவினாள். பட்டுப்போன்று மென்மையாக அதை தொட்டு அவள் கண்களை மூடி அந்த இன்பத்தை ரசித்தாள்.
அந்த நொடி அவள் அங்கு இல்லை அவள் ஒரு நாற்காலியில் அமர்ந்து கொண்டாள் அவள் தலையில் தண்ணீர் ஊற்றப்பட்டு நன்றாக நனைந்து போனது அவள் கண்முன் ஒரு கரம் வந்தது அந்த கரத்தில் ஒரு சவராகத்தியை கண்டாள். அவள் முகம் மலர்ந்தது அவள் தலை குனிகிறாள். சவரகத்தி அவள் தலைக்குமேல் வந்து அவள் முடியை எடுக்கப்போகிறது..
குமுதா! குமுதா!
----------
குரல் கேட்டு குமுதா திடுக்கிட்டு கண்களை திறந்தாள். சே!என்ன வழக்கம் இது ?வரவர அவள் பகல் கனவுகளை அடக்க முடிவதில்லை என்று எண்ணி அவளுக்குக
வேட்கமாக இருந்தது.
குமுதா! என்று அழைத்துக்கொண்டு அங்கு வந்தான் முதலாளி ஈஸ்வர்.
ஈஸ்வர் அந்த கடையின் முதலாளியாக இருப்பினும், எந்தவித அலட்டல் இல்லாத கடும் உழைப்பாளி. அவன் நல்ல உயரம். கொஞ்சம் மாநிறமாக இருப்பினும் நல்ல தேககட்டுடன் இருந்தான். வயது 30 க்குள் இருக்கும்.
அவன் கணீர் குரலில் மீண்டு வந்த குமுதா சுதாரித்துக்கொண்டு திரும்பினாள்.
சிரித்த முகத்துடன் அவள் அருகில் வந்தவன் ஈஸ்வர்.
என்ன இன்னுமுமா வேலை முடியல்லை?
ஆமாங்க யா
வாங்க போங்க ன்னு கூப்டாத ன்னு எவ்ளோ தடவை சொல்றது? என்று கடிந்து கொண்டான்.
ஈஸ்வர் ஒருவகையில் அவளுக்கு தெரிந்தவன் தான். கொஞ்ச வருடங்களுக்கு முன்பு அவன் இந்த கடையில் வேலை செய்து வந்தான். அவன் அணுகுமுறை ஒழுக்கம் மற்றும் உழைப்பே அவனை இந்த கடை முதலாளிக்கு பிடித்துவிட்டது. கொஞ்ச நாளிலேயே அவன் முதலாளி ஆகிவிட்டான்.
என்ன குமுதா?அதென்ன உன் கையிலே? என்று அவள் அருகில் வந்தான்.
குமுதா சிரித்தபடியே சமாளித்தாள்.
ஒன்னும் இல்லைங்க, அந்த டேபிளை சுத்தம் பண்ணிக்கிட்டு இருந்தேன்.
ஈஸ்வர் அந்த முடிக்கற்றையை குமுதா விடமிருந்து வாங்கிக்கொண்டான்.
இது காலையில அந்த காலேஜ் பொண்ணு வந்து முடி வெட்டிக்கிட்டது இல்ல? என்று கேட்டான்.
அவள் சற்றும் எதிர்பாராத நேரத்தில் அந்த வெட்டிய முடியை முகர்ந்தான்.
குமுதாவிற்கு அதை கண்டதும் வயிற்றில் பட்டாம்பூச்சி பறப்பதை போல உணர்ந்தாள். சார் என்ன பண்றீங்க?என்றாள்
சட்டென தன் தவறை உணர்ந்துகொண்ட ஈஸ்வர். தன் நிலைக்கு வந்தான்.
ஒண்ணும் இல்ல ஒண்ணும் இல்ல. உனக்கு லேட்டாகிடும் நீ கிளம்பு. என்றான். சார் அப்போ நீங்க ?என்றாள்.
நானா? அது வந்து.. எனக்கொண்ணும் அவசரமில்லை நான் என் பிரென்ட் வருவான் அவனோட கிளம்பிக்குறேன். நீ கிளம்பு என்றவரே அந்த முடிக்கற்றையுடன் உள்ளே சென்றுவிட்டான்.
குமுதா அங்கிருந்து கிளம்பி அவள் தங்கும் விடுதி அறைக்கு சென்றாள். ஆனால் அவள் மனம் சுற்றி சுற்றி அந்த வெட்டிய கூந்தல் கற்றையை தொடர்ந்தே இருந்தது. முக்கியமாக ஈஸ்வர் அதனை அவ்வளவு ஆர்வமாக எடுத்துக்கொண்டது,சற்றும் எதிர்பார்க்காமல் அந்த முடியை முகர்ந்து, எதனால் என்று எண்ணியவாறே அவள் அறை தோழி சுனிதாவின் வரவுக்காக காத்திருந்தாள்.
சுனிதா 28 வயது மங்கை. அருகில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டி பணியில் இருந்தாள். நல்ல உயரமும் கொஞ்சம் சதைபிடிப்பான உடல்வாகும் உள்ளவள். கொஞ்சம் மங்கலான நிறம் இருந்தாலும் அவள் முகம் கவர்ச்சியாக இருக்கும். முக்கியமாக அவள் கூந்தல் தான் அவள் வசீகரமான உடல் பகுதி. அவள் கூந்தல் இடுப்பிற்கு கீழ் வளர்த்திருப்பாள். அலை அலையாக,
அடர்த்தியாக, சற்றேதாக செம்பட்டை கலந்த நிறத்தில் காண்போரை கவரும். அவள் அந்த கூந்தலை எப்போதும் நன்றாக கொண்டை போட்டு கேப் அணிந்து மூடி இருப்பாள். அவளுடைய கூந்தலை முழுவதும் பார்கக்கூடியவள் குமுதா மட்டுமே.
அன்று அவள் கொஞ்ச நேர் தாமதமாய் வந்தாள். குமுதா ஆவலுடன் அவளை வரவேற்று தேநீரை கொடுத்தாள். சுனிதா முகம் கொஞ்சம் வாட்டதுடன் இருந்ததை கண்ட குமுதா அதன் காரணத்தை கேட்டாள்.
சுனிதா அவள் வேலை பார்க்கும் துணி ஏற்றுமதி நிறுவனத்தில் தையல் பிரிவில் வேலை செய்யும் கார்த்தி என்கிற இளைஞனை காதலித்து வந்தாள். இருவரும் தனிமையில் அடிக்கடி சந்திக்க செல்வதை கண்ட யாரோ சில பேர், அவள் இல்லாத சமயத்தில் அவள் பொறுப்பில் இருந்த கோடோனில் இருந்து சில துணி களை திருடிவிட்டனர். அவளது அதிர்ஷ்டம் அந்த திருடர்கள் மட்டிக்கொண்டனர். என்றாலும் அவளது அதிகாரிகள் அவளது கவனக்குறைவினால்தான் அந்த திருட்டு நடந்தது என்று குற்றம் சாட்டினர். அவள் அந்த சமயத்தில் வேறு இடத்தில் இருந்ததாகவும் அந்த இடத்தில் வேறு ஒரு காவலர் இருந்ததாகவும் சொன்னாள். ஆனால் அவள் உயர் அதிகாரி அவளுக்கு ஒரு வீடியோவை காட்டினார். அதனால் அவள் மேற்கொண்டு வாதாட முடியாமல் தவித்தாள். மேற்கொண்டு சொல்லமுடியாமல் அழ ஆரம்பித்தாள்.
குமுதா இடைமரித்தாள். சுனி! ஹே அழாதப்பா! தைரியமான பொண்ணு நீயே அழுதா என்ன அர்த்தம்? அது என்ன வீடியோ? என்றாள்.
சொல்றதுக்கு கொஞ்சம் கூச்சமா இருக்கு குமுதா. அது கார்த்தியும் நானும் இருந்த வீடியோ.
என்ன? ஆபிசில் கசமூஸா பண்ணிடீங்களா?
அது இல்லை ஆனால்..
அதுவே நடக்கவில்லை அப்புறம் என்ன ஆனா?
அதுவந்து கார்த்தி என்னோட இருந்தப்போ அவன் என் முடியை பார்க்கணும்னு சொன்னான்.
என்னது? முடியை பார்க்கணும்னானா?
ஆமாம்டி ஆபீஸ்ல அதெல்லாம் வேண்டாம்னு சொன்னேன்.
ஆனால் அவன் ரொம்ப பிடிவதமா பார்த்தே ஆகணும்னு சொன்னான்.
அதுக்கு?
அதனால நான் கோடௌன் பின்னாடி ஒரு சந்து இருக்கும் அவனை அங்க வர சொன்னேன்.
அவன் அங்க வந்ததும் அவனே என் கொண்டையை அவுத்து என் ஜடையை பிரிச்சி விட்டான்.
அப்புறம்?
திடீர்னு என்னோட முடிக்கு முத்தம் கொடுக்க வேண்டும் னு சொன்னான். நானும் ஏதோ எண்ணத்தில் அப்டியே இருந்துட்டேன். அவன் என் முடியை கோதி என் தலைமுடி முழுக்க முகர்ந்து என்ன என்னவோ செய்தான். ஆனால் என் உடம்பை தொடவே இல்லை. அப்புறம் என்னை கிறக்கமா பார்த்தான். என்னால அதுக்குமேல இருக்கமுடியல. சட்டுனு சுயநினைவு வந்து பதரிப்போய் அவனை உசுப்பினேன். நாங்க ரெண்டு பேரும் மறுபடியும் உள்ளே வந்துட்டோம்.
சரி, தனியா தானே இருந்திங்க எவ்வளவு நேரம் இந்த கூத்தடிச்சிங்க.
நாங்க வந்தது லஞ்சுக்குத்தாண்டி. அப்போ 5 நிமிஷம் கூட இருக்காது.
அட லூசு என்னடி கண்ராவி இது? அவன் என்ன முடி பயத்தியமா என்றாள் சற்று கோபமாக.
தெரியலை டீ ஆனால் அவன் ரொம்ப நல்லவன்.
நாசமா போக இதெல்லாம் அங்க திருடு போனப்போ நடந்ததா?
கிடையாது, ஆனா அவனுங்க எங்களை கோர்த்து விட வேண்டி செல்லுல நேரம் தேதி எல்லாம் மாத்தி வீடியோ எடுத்து பாஸ் கிட்ட மாட்டி விட்டிருக்காங்க.
சரி இது எப்படி நீங்க கண்டுபிடிசீங்க?
கார்த்தியோட சிநேகிதன் தான் கண்டுபிடிச்சான். ஆனாலும் பிரயோஜனம் இல்லையே. நாங்க இந்த விஷயம் திருட்டு நடந்த அன்னிக்கு நடக்கலைன்னு நிரூபிக்க முடியலை.
அடப் பாவி? அப்ப யாரோ உன்னை ரொம்ப நாளைக்கு நோட்டம் போட்டிருக்காங்க.
சரி இருக்கட்டும். இப்போ உன் ஆபீசர் என்ன சொல்றங்க.
என்னத்த சொல்ல. இத்தனை நாள் நான் டூட்டியில் ரொம்ப ஒழுங்கா இருப்பேன். நிறைய தடவை நல்ல பேர் வாங்கியிருக்கேன். இந்த தடவை என்னோட தலையெழுத்து செய்யாத தப்புக்கு மாட்டிருக்கேன்.
இதுக்கு என்ன முடிவு.
அவங்க எங்க ரெண்டு பேரோட உழைப்பை மதிக்கிறாங்க. ஆனா இந்த தப்புக்கு தண்டனை கொடுக்கவும் நினைக்கிறாங்க. அதனால எங்களை சஸ்பெண்ட் பண்ணிட்டாங்க. எங்களை வேர ஆபிசுக்கு மாத்தி போட போறாங்க. என்று வருத்தமாக சொன்னாள். அய்யோயோ அப்போ அவனை எப்படி பார்ப்பது என்றாள். குமுதா
கஷ்டம்தான். அதோடு எனக்கு இன்னொரு பிரச்சனை இருக்கு என்றாள்.
இன்னுமா?
ஆமாம் நான் அடுத்த ஆபீஸ்ல சேரும்போது நான் இவ்வளவு பெரிய தலைமுடியோட இருக்கக்கூடாதாம்.
என்னடி சொல்ற? இடிமேலே இடியாய் இறக்குற இன்னைக்கு என்று அதிர்ந்தாள்.
சுனிதா சொன்னதை கேட்டு குமுதா கொஞ்சம் கோவப்பட்டாள். அதெப்படி?உன்னை அவங்க சஸ்பெண்ட் பண்ண அதிகாரம் இருக்கு ஆனா உன் முடியை வெட்டிக்க சொல்ல அவங்களுக்கு என்ன அதிகாரம்? என்றாள்
சுனிதா அமைதியாக சோன்னாள். நானும் இதை தான் கேட்டேன். ஆனா அவங்க என்னை மன்னிச்சதே பெரிய விஷயம்.அதுக்குமேல எனக்கு வேலை வேணும்னா நான் அதை செய்துதான் ஆகணும். என்று கண்ணீருடன் சொன்னாள்.
சரிடீ அதுக்கு நீ என்ன பண்ணமுடியும்?
அதுதான் ஒரு முடிவு பண்ணி இருக்கேன்
என்னது என்று கேட்டாள் குமுதா
நான் மொட்டையடிக்கபோறேன் என்று கண்கள் கலங்கியவாரே கூறினாள் சுனிதா.
தொடரும்...
அற்புதமான தொடக்கம் நண்பா இதனுடைய அடுத்த பாகத்தையும் அதேபோன்று உங்களின் மத்த கதைகளின் அடுத்தடுத்த பாகத்தையும் காண மிகவும் ஆவலாக உள்ளேன் ஒரே ஒரு கோரிக்கை உங்களின் அடுத்த பதிவு எப்போது வரும் என்று முடிந்தால் சொல்லுங்கள்
ReplyDeleteKeep it up bro
ReplyDelete♥️♥️
ReplyDeleteநல்ல தொடக்கம் இப்படியே தொடருங்கள்.ஆனால் கதை வெளியிடுதல் மிக கால தாமதமாக இருக்கிறது
ReplyDeleteKuppu saloon continue pls
ReplyDeleteKuppu saloon continue plzzzzzzzzzzz
ReplyDeleteWrite story
ReplyDeleteஅருமையான கதை நண்பா உங்களின் அடுத்த பதிவு எப்போது வரும்
ReplyDeleteEapothan bro next part uplod panvenga ean evlo late panrenga bro
ReplyDeleteEapo next part poduvenga bro
ReplyDeleteமே 1 இனிய உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள் நண்பா உங்களின் உழைப்புக்கு என் பாராட்டுக்கள் உங்களின் அடுத்த பதிவுக்காக காத்திருப்பேன்
ReplyDeleteNext part story pls
ReplyDelete