டேய் அதுக்கும் இதுக்கும் என்னடா சம்பந்தம்?
கல்யாண துக்கு அவன் அவனுக்கு பொண்ணு கிடைக்க மாட்டேங்கிது நீ என்னடான்னா?
நீங்கள் எல்லாரும் சேர்ந்து என்ன வெல்லாம் செய்விங்க ன்னு தெரியாதா?
ஏற்கனவே செஞ்சது எல்லாம் போதும்.
டெ பழசை நெனெச்சு இப்பிடி பயித்தியம் பிடிச்ச மாதிரி சுத்திகிட்டு இருக்க. எனக்கு மனசு வலிக்காதா
எம்மா இப்படி படுத்துற?
டேய் இப்படியே போனா உன் வாழ்க்கையே வீணா போய்டும்
சரிம்மா இப்போ என்ன என்னதான் செய்ய சொல்லுற?
அந்த பொண்ணு டீடெயில்ஸ் அனுப்புறேன் பார்த்து சொல்லு
சிறிது நேரம் கழித்து
அம்மா இந்த பொண்ணா??
ஆமாம் டா நல்லா இருக்கால்ல
அட பாவி இவளையா??.
நல்லா விசாரிச்சியா மா?
நல்லா விசாரிச்சேன் டா.
இவ நம்மளுக்குரு விதத்தில் சொந்த கார பொண்ணுதான். நல்ல குடும்பம்
நமக்கு தகுந்த மாதிரி குடும்பம் ரொம்ப பிக்கல் பிடுங்கல் இல்ல கொஞ்சம் சொத்தும் இருக்கு உனக்கு நல்ல ஜோடியா இருக்கும்டா
இவளை கட்டிக்கிட்டா நான் நாசமா தான் போகணும்.
என்னடா சொல்ற
அதெல்லாம் வேண்டாம் உனக்கு புரியாது
எனக்கு கலியாணமே ஆகலேன்னாலும் பரவால்ல
மறுபடியும் ஆரம்பிச்சிட்டியா? உன்னை வழிக்கு கொண்டுவர்ற அவதான் கரெக்ட்.
அதான் கரெக்ட்
நான் அக்கா கிட்ட பேசிட்டு வரேன்
அவ எதுக்குடா?
சொல்றேன் ல்ல கலை அக்கா கிட்ட பேசிட்டு தான் எதுனாலும்.
என்னவோ பண்ணி தொலை ஆனா நான் முடிவு பண்ணிட்டேன் சரி ன்னு சொல்வேன்னு எதிர்பார்க்கிறேன்.
அக்கா பேசுகிறாள்
என்னடா தம்பி எப்படி என் செலக்ஷன்?
ஏண்டி அக்கா உனக்கு நான் என்ன பாவம் பண்ணே
என்னடா ஆச்சு இப்டி பேசுற?
பின்ன என்னவாம் எனக்கு கிடைச்ச வாழ்க்கையும் அமையல. நா foriegn போறேன்னு ஆரம்பிச்சா இவள போய் என் தலையில் கட்டுறியே
டேய் அந்த பொண்ணு உன் ஆபீஸ் ல வேலை பார்க்கிற ன்ன தால தான் நான் அம்மாவை பேச சொன்னேன்
அவ தான் கா என் onsite க்கு உலை வெச்சவ
என்னடா சொல்லுற தம்பி?
நடந்த பிளாஷ் பேக் ஓட..
ஹ்ம்ம் இவ்ளோ நடந்திருக்கா
சரியான ராங்கி க்கா அவ
என்னோட பிராஜெக்ட் மேனேஜர் கோவமே படாத ஆள் அவரையே இவ மாத்திட்டா இப்போ என் மூஞ்சிய கூட பார்க்க மாட்டேங்கிறாரு
டேய் நீ சம்மதம் னு சொல்லுடா அவளை நான் பார்த்துக்குறேன்.
ரிஸ்க் எல்லாம் வேண்டாம் க்கா
அக்காவை நம்பு
சரி கடவுள் மேல பாரத்தை போட்ட மாதிரி உன் மேலையும் பாரத்தை போடுறேன். ஆனால் இது எனக்கு சுத்தமா பிடிக்கலை.
பவியா வுக்கு கால்
ஹலோ யாரு?
நான்தான் மா கதிர் அக்கா கலை பேசுறேன்
சொல்லுங்க அக்கா
எப்படி இருக்க
நல்ல இருக்கேன் க்கா
கதிர் சொன்னான் அவன் ஆபிஸ் ல தான் நீ வேலை பார்க்கிறேன்னு ஜாதகம் எல்லாம் பெரியவங்க பார்த்துப்பாங்க ஆனால் நம்மதானே நமக்கு புடிச்சதை தேர்ந்தெடுக்கணும்
ஆமாம் க்கா அவரு கூடத்தான் வேலை பார்க்கிறேன்
அதிர்ஷ்டக்காரி மா நீ உன்னோட ஜாதகம் பார்த்தேன் உனக்கு வரபோற மாப்பிள்ளை ராஜ யோகம் இருக்கிறவனாம்
அவரை விட்டு கொடுக்காம பேசுறீங்க
அப்படி இல்லமா உன்னோட யோகத்தை தான் சொல்லுறேன்.
என்ன சொல்றிங்கன்னு புரியல்ல க்கா
விவரமா சொல்லுறேன் உனக்கும் கதிருக்கும் நிச்சயம் நடுக்கும்ல அன்னியில் இருந்து தான் உன்னோட வாழ்க்கையே மாற போகுது
என்னென்னவோ சொல்றிங்க க்கா
நீ பாரு நிச்சதார்த்தம் நடந்த கையோட உங்களுக்கு வெளிநாடு போகிற யோகம் வரப்போகுது
அப்புறம் நீங்க துபாயோ அமெரிக்கவோ செட்டில் ஆகிடுங்க.
சும்மா சொல்லாதீங்க க்கா
நிஜத்தை தான் சொல்றேன்.
உங்க கிட்ட சொல்றதுக்கு என்னக்கா. எனக்கும் ஜாதகத்துல அதிஷ்டத்தில் நம்பிக்கை இருக்கு ஆனால்
என்ன ஆனால்
நான் பண்ண வேலையயால ஒரு தப்பு நடந்துருச்சு
என்ன ஆச்சு??
கதிரோட வேலை பார்த்தாப்போ நான் கொஞ்சம் சண்டை போட்டதால எங்க வேலை கெட்டு போச்சு பழி அவரு மேல விழுந்துச்சு அதனால அவனுக்கு onsite கிடைக்காதுன்னு சொல்ராங்க.
ஆனால் அது இன்னொரு பையனுக்கு போகுற மாதிரி பேசிக்கிறாங்க
அதனால?
அக்கா தப்பா நினைக்காதீங்க நான் நல்லா இருக்கணும் அந்த அதிர்ஷ்டட்டத்தை பயன்படுத்த நினைக்கிறேன்.
கலை புரிந்து கொண்டாள்.
ஏண்டி! தேரை இழுத்து தெருவுல விட்ட மாதிரி ஒழுங்கா இருந்த என் தம்பி வாழ்க்கையை நாசம் பண்ணிட்டு நீ மட்டும் நல்லா இருக்க போறேன்னு என் கிட்டயே சொல்றியா? வெச்சிக்கிறேண்டி உன்னைய என்று கறுவினாள் கலையரசி.
புரிஞ்சுதும்மா ஆனால் அந்த வாய்ப்பு நல்லா படியா பயன்படுத்த தெரியலைன்னா வாழ்க்கை வீணா போய்டும் பார்த்து நடந்துக்கோ என்றாள்.
டேய் அவ ராங்கி மட்டும் இல்லடா சரியான சுயநலக்காரிடா. நானே அப்பாகிட்ட பேசி இதை நிறுத்திடுறேன். ஆனால் அவளை மட்டும் நீ சும்மா விட கூடாது டா. அவ இருக்கணும்னு எல்லாரையும் போட்டு தள்ளிருவா.
அக்கா விடு இது வரைக்கும் தப்பிச்சேன் னு சந்தோஷம்.
கதிர் கொஞ்சம் உள்ள வா என்று அவன் மேனேஜர் கூப்பிட
கதிர் சென்று சொல்லுங்க சார்
உனக்கு ஒரு குட் நியூஸ் உன் ப்ராஜெக்ட் approve ஆகிடுச்சு.
Sir அந்த presentetion சொதப்பி வெச்சிட்டேன்
அதெல்லாம் ஒண்ணுமே இல்ல. அது செம்ம சூப்பரா இருந்தது. நீ அதுல கணக்குல ஒரு மிஸ்டேக் பண்ணி இருந்த அதை நான் பார்த்து கரெக்ட் பண்ணிட்டேன். Client க்கு அனுப்பினதுக்கு அப்புறம் அவங்க ரொம்ப சந்தோஷ பட்டாங்க. அதனால project Ok பண்ணியாச்சு. நீ அடுத்த வாரம் hr அ பார்த்துட்டு வரணும்
எதுக்கு sir. டேய் உனக்கு விசா அப்ளை பண்ணத்தான். 5 years contract. Luck இருந்தா permanent ஆகிடலாம்.
Wow தேங்க்ஸ் sir என்று கண்கள் குளம் ஆகும் அளவிற்கு உணர்ச்சி வசப்பட்டான் கதிர்.
Cheer up boy! நல்லா enjoy பண்ணு என்று அனுப்பினார் அவன் மேலாளர். கதிர் சந்தோஷ முகத்துடன் வெளியே வந்தாலும் அவன் மகிழ்ச்சி வெளியே தெரியாமல் முகத்தை மாற்றி கொண்டான். அப்போது பவியா அவன் முன் வந்தாள்.
Sir
என்ன என்று கடுமையாக கேட்டான்.
Sir எனக்கு கல்யாணம் fix பண்ண போறாங்க
Oh awesome மாப்பிள்ளை யாரு?
நம்ம next block ல இருக்காரு sir sujith
கதிர் மீண்டும் அவளை தீர்க்கமாக பார்த்தான்.
ரோம்ப சந்தோஷம். எல்லாம் பேசிட்டிங்களா.
ஆமாம் சர் வர்ற வெள்ளிக்கிழமை engagement.
கதிர் எழுந்தான். டீம் எல்லாரும் இங்க வாங்க என்று சத்தமாக கூப்பிட்டான்.
பவியா சற்று அதிர்ந்து போனாள்.
----
டீம் எல்லாரும் வாங்க என்று கூப்பிட்டதும் அவன் சக ஊழியர்கள் அனைவரும் அவனை நோக்கி வந்தனர்.
இன்னிக்கி நான் ரெண்டு நல்ல செய்தி சொல்லப்போறேன். அதோட ஒரு surprise இருக்கு.
என்ன கதிர் என்ன கதிர்??? எல்லோரும் கேட்டனர்.
முதல் செய்தி. நாம கஷ்ட்ட பட்டு ரெடி பண்ண மாடல் project client approve பண்ணிட்டாங்க
ஹே சூப்பர்!!சூப்பர்!!எல்லோரும் கத்துகிறார்கள்.
இந்த பிரமாதமான ப்ராஜெக்ட் அ சிறப்பா முடிக்க உதவி பண்ண நம்ம பவியா க்கு ஸ்பெஷல் thanks. அடுத்த செய்தி நம்ம பவியா க்கு கல்யாணம் fix ஆகி இருக்கு.
Wow congrats டீ! Super டீ
பவியா இப்போது அசடு வழிகிறாள்.
நன்றி நன்றி இப்போ அந்த surprise என்னன்னா நாம team outing போகப்போறோம்
ஹே thanks கதிர் ய் love you என்று எல்லோரும் கத்துகின்றர்கள்.
கதிருக்கு மட்டும் கோபம் கொப்பளித்தது.
அவன் மனது சரியில்லை. அவனுக்கு வெற்றி கூட சந்தோஷத்தை தரவில்லை மாறாக அவன் அக்காவிடம் பவியா பேசியதும் அவனை வெறுப்பேற்றும் விதமாக அவளுடைய நிச்சயம்தார்த்தம் பற்றி கூறியது அவனுக்கு கடுமையான மன உளைச்சல் அடைந்தான்.
அப்போது அவனுக்கு அருகில் யாரோ உட்கார்ந்து கொண்டதை உணர்ந்தான்.
அவள் அத்தை மகள் திவ்யா.
கதிர் என்ன இங்க உட்கார்ந்துகிட்டு இருக்க?
இன்னும் இவ கல்யாணம் பண்ணிக்கலையா?
ஹே திவ்யா வா வா உட்காரு
என்னடா நீ பிசி boy ன்னு facebook ல db போட்டு சுத்துறவன் இங்க என்னடா சாமியார் மாதிரி உட்கார்ந்துகிட்டு இருக்க
அதெல்லாம் ஒன்னும் இல்ல
ஐயே மாமா டேய் உன் மொகரைய பார்த்தாலே தெரியுது உன் மூடு நல்லா இல்ல ன்னு
சரி அது இருக்கட்டும் இன்னும் நீ எங்கடி சுத்திகிட்டு இருக்க?
நானா அது பெரிய கதை.
எனக்கு time இருக்குடி
சரி வா காப்பி ஷாப் போலாம்.
திவ்யா நல்ல சூட்டியான பெண் கதிருக்கு ஒன்று விட்ட அத்தை மகள். அவனை விட அனைத்திலும் இணையானவள்தான் படிப்பு வேலை அழகு என்று எதிலும் குறைவில்லை குணத்திலும் தங்கமே. அவர்களுக்கு பொருத்தம் கூட பார்த்தாகி விட்டது. அவன் அம்மாவுக்கும் கலைக்கும் கூட திவ்யாவை மிகவும் பிடித்து போனது. அவளுக்கு நிச்சயம் செய்ய முடிவானதும் அவளுக்கு கதிர் ஒரு முத்து மோதிரம் கூட பரிசளித்தான் ஆனால் அவன் அப்பாவுக்கும் அத்தைக்கும் ஒரு சிறிய வாக்குவாதம் ஏற்பட்டு அது பெரிய சண்டையாக மாறியது. முடிவில் அவன் நிச்சயம் நின்றது.
திவ்யாவின் கையில் இன்னும் முத்து மோதிரம் இருந்தது.
கதிரின் நினைவை கலைத்தாள் திவ்யா.
ஹே காபி வந்து அஞ்சு நிமிஷம் ஆகுது நான் பாதியை குடிச்சிட்டேன் இப்போ.
ஒண்ணும் இல்ல திவி.
நீ ஏன் இன்னும் இப்பிடியே இருக்க
ஏன் மாமா அப்படி கேக்குற?
நீ இன்னும் இந்த மோதிரத்தை கழட்டல்ல.
முடியல மாமா.
நீ ஏன் பிடிவாதம் பிடிக்குற? நீ நல்ல பையனா பார்த்து கல்யாணம் பண்ணிக்கலாம் ல.
எனக்கு பிடிச்ச பையன் என்னை கல்யாணம் பண்ணிக்காம இருக்கானே.
என்ன படுத்தாத.
சரி நீ மட்டும் ஏன் கல்யாணம் பண்ணிக்காம இருக்க?
உன்னை மறந்துட்டு எப்படி நல்லா இருக்க முடியும்?
ஆம்பிளை உனக்கே அப்படி இருக்குன்னா பொம்பளை நான் எவ்வளவு strong ஆ இருப்பேன்
சாரிம்மா உன்னை நான் தான் கஷ்ட்ட படுத்திட்டேன். என்னை மன்னிச்சுடு.
. நமக்கு கல்யாணம் நிச்சயம் ஆன உடனே என் மனசெல்லாம் உன்னோட fix ஆகிடுச்சு.இனிமே என்னால இன்னொரு பையன எல்லாம் ஏத்துக்கிட்டு வாழ முடியாது. அதுக்காக நான் கேவலமா முடிவு எடுக்க மாட்டேன். கடைசி வரைக்கும் இப்படி யே இருந்துடுவேன்.
கலை அக்காகிட்ட பேசுறேன். கூடிய சீக்கிரம் இதுக்கு நல்ல முடிவு வரும்.
எனக்கு உன் மேல நம்பிக்கை இருக்கு மாமா அவள் கையை இருக்க பிடித்து கன்னத்தில் ஒற்றி கொண்டாள்.
எனக்கு தெரியாது நீ தான் எனக்கும் திவ்யாவுக்கும் கல்யாணம் பண்ணி வெக்கணும்.
அப்பாக்கும் அத்தைக்கும் ஏற்கனவே
ஏற்கனவே தகராறு அதான
ஆமாம்.
அவள் என்னை நினைச்சி இன்னும் தனியா வாழ்க்கையை நடத்திக்கிட்டு இருக்கா நான் கூச்சம் இல்லாம இன்னொரு பொண்ணை பார்க்க
வீட்டுக்கு முன்னால் ஒரு கார் நின்றது.
என்னக்கா சொல்லி வெச்ச அவங்க வீட்டிலேருந்து அத்தை வர்றாங்க?
இருடா அவங்களே பேசுவாங்க. கவனி என்றாள் கலை.
அப்பாவும் அத்தையும் நெடுநேரம் பேசினார்கள் அத்தை அழுதாள். அப்பா பதட்டம் ஆனார். அவளை தடுத்து நிறுத்தினார். இருவரும் சமாதானம் ஆகினர்.
எல்லோரையும் கூப்பிட்டார். அம்மா கதிரை அழைத்தாள். டேய் திவ்யா வை உனக்கு மறுபடியும் பேசி கல்யாணம் முடிக்கலாம் ன்னு நானும் உங்க அத்தையும் முடிவு பண்ணியிருக்கோம். உனக்கு இதிலே சம்மதமா?
அப்பா எனக்கு சம்மதம் தான். ஏற்கனவே அவளை ஏமாத்திட்டோம் ன்னு குற்ற உணர்ச்சியா இருக்கு என்று சொல்ல
பெரிய வார்த்தை எல்லாம் பேசாதப்பா நான் பண்ண தப்பு உங்களை பிரிச்சிட்டோம். இதுக்கு காரணம் நான் தான். பெரியண்ணன் கிட்ட பேச கூடாதது எல்லாம் பேசிட்டேன்.அதனால கஷ்ட்டம். அண்ணே இனிமே இழுக்க வேணாம் சீக்கிரம் ஒரு முகூர்த்தம் பார்த்துடலாம.
இதுக்கு முக்கியமான காரணம் உங்க அக்கா தான் பா
கலையா அவ என்ன பண்ணா? என்றான். அவ என்கூட பேசினாப்பா உங்க மனசு புரியாம கெளரவம் ன்னு புடிவாதம் பிடிச்சிக்கிட்டு இருந்தேன். அவ நிலைமையை எடுத்து சொல்லி என்னை சம்மதிக்க வெச்சிட்டாப்பா.
அக்கான்னா கொக்கா?
போன் ஒலிக்கிறது
என்னடா தம்பி சந்தோசமா
எக்கா தெய்வமே! கோயில் கட்டி கும்பிடனும் உனக்கு
டேய் கோயில் ன்னு சொன்னதும் எனக்கு ஒரு ஞாபகம் வருது. என்னக்கா
ஜோசியர் உனக்கு கலியாணம் ஆனதுக்கு அப்புறம் ஒரு பரிகாரம் பண்ணனும்னு சொன்னாரு டா.
அக்கா திவ்யா கால் ல வர்றா
Confrence ல போடு
அக்கா இப்பிடி குண்டாய் போடுற
இதுக்கு திவ்யா எப்படி ஒத்துக்க சொல்லுற?
டேய் நான் ஜோசியர் சொன்னதை சொன்னேன் பண்ணுறதும் பண்ணாததும் உங்க இஷ்டம்.
மாமா அண்ணி நம்ம நல்லதுக்காக தான சொல்லுறாங்க ஒண்ணும் தப்பில்லை
அண்ணி நீங்க கல்யாண ஏற்பாடு பண்ணுங்க நான் பேசிக்கிறேன் என்றாள்.
பாத்தியாடா மருமவ ளை இவளை விட்டுட்டு அந்த பவியாவை புடிச்சோம் பாரு
எந்த பவியா?
அதெல்லாம் மிகப்பெரிய story.
அடுத்த பாகம் 3
No comments:
Post a Comment